காயம் காரணமாக வெளியேறிய இங்கிலாந்து வீரர்: விக்கெட் கீப்பிங்கில் மாற்றம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் காயமடைந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவுக்கு பதிலாக வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

நாட்டிங்காமில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ பிடித்தபோது, அவரது இடது கை விரலில் பயங்கரமாக அடிபட்டது.

இதனால் வலியால் துடித்த பேர்ஸ்டோ உடனடியாக வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள 4வது டெஸ்ட் போட்டியில், பேர்ஸ்டோவுக்கு பதிலாக வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வின்ஸ் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்மித் கூறுகையில், ‘ஜேம்ஸ் வின்ஸை டெஸ்ட் தொடருக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறோம். சமீபத்தில் நடந்த கவுண்டி போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers