டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தார் விராட் கோஹ்லி!

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது

முதல் டெஸ்டில் இந்திய அணி தலைவர் கோஹ்லி 200 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார்.

லார்ட்ஸ் டெஸ்டில் 40 ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால், 2-வது இடத்திற்கு இறங்கினார். டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் மொத்தமாக அவர் 200 ஓட்டங்களை சேர்த்தார். இதன்மூலம் மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...