கோஹ்லிகிட்ட போய் எல்லோரும் பாடம் படிங்க! தோல்விக்கு பின் கோபப்பட்டு பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள விரும்பினால், அதை கோஹ்லியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் பால் பார்ப்ரேஸ் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இங்கிலாந்து அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வியை சந்தித்து இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றியது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளரான பால் பார்ப்ரேஸ், இந்தியாவின் சிறப்பான செயல்பாட்டுக்கு அணித் தலைவர் கோஹ்லி தான் முக்கிய காரணம்.

இந்திய அணியில் மற்ற வீரர்கள் சொதப்பிய போதும் கூட தனி ஆளாக போராடினார். தற்போது அவருக்கு மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்கவே மிக சிறப்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்துகிறது.

கிரிக்கெட் விளையாடுவது எப்படி என கற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கு மிக சிறந்த வீரரான விராட் கோலியிடம் கற்றுக் கொள்ளுங்கள். கோஹ்லியை போன்று சிறந்த துடுப்பாட்ட வீரர் உங்களுக்கு வேறு யாரும் கற்றுத் தர மாட்டார்கள்.

கோஹ்லியை போன்று சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு விளையாட பழகிக் கொள்ளுங்கள், அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் மிகச்சிறந்த ஸ்விங் பவுலர், மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் கோஹ்லி ஆகி விட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...