இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியை விட நாங்கள் சிறப்பாக தயாரானதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இதன் காரணமாக இந்திய வீரர்கள் வலைப்பயிற்சிக்கு கூட செல்லாமல், ஹோட்டல் அறைக்குள்ளே தங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இப்படி இங்கிலாந்து மண்ணில் படுகேவலமாக விளையாடி வரும் இந்திய அணியை விட நாங்கள் சிறப்பாக விளையாடியதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஜ் கூறியுள்ளார்.
அவர், நான் இங்கிலாந்துக்கு இரண்டு முறை சுற்றுப்பயண்ம் செய்துள்ளேன். இரண்டு முறையும், பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
எந்த ஆசிய அணி இங்கிலாந்து சென்றாலும் அங்கு தடுமாறுவது சகஜம் தான். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அங்கு சாதிக்க, 25 நாட்களுக்கு முன்பே அங்கு சென்றது தான் காரணம்.
அந்த வகையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறியுள்ளார்.