வலைப்பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக் பேட்டில் பந்து படவில்லை: வேதனை தெரிவித்த கங்குலி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியடைந்தது குறித்து, இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி வேதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 159 ஓட்டங்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.

இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில்,

‘இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இன்னும் மோசம் என்னவென்றால், 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்திய வீரர்கள் எப்படி தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

வேண்டுமென்றால் ஷிகர் தவானை மீண்டும் அணியில் சேர்ப்பார்கள். புஜாராவிடம் பேசலாம். அவர் மட்டுமே 70 பந்துகள் நின்றார். ஆனால் அணிக்கு தேவை ஓட்டங்கள். அழுத்தத்தையும், சுமையையும் குறைக்க வேண்டுமெனில் வெறுமனே நிற்பது மட்டும் போதாது. ஓட்டங்கள் தேவை.

அடித்து ஆடினால் தான் எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு தன்னம்பிக்கை வரும். ரிஷப் பண்ட் அணிக்கு வர வேண்டும். தினேஷ் கார்த்திக் மிக மோசமான பார்மில் உள்ளார். காலையில் நான் வலைப்பயிற்சியில் கார்த்திக் துடுப்பாட்டம் செய்வதை பார்த்தேன்.

வலையில் கூட அவரால் பந்துடன் மட்டையை தொடர்புபடுத்த முடியவில்லை. மேலும், ஒரு இடது கை வீரர் அணிக்கு தேவை. இந்திய அணியின் தோல்விகள் ரிஷப் பண்ட்டை பாதித்திருக்காது. மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்’ என தெரிவித்துள்ளார்.

PTI
Stu Forster

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...