தென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை: கடைசி போட்டியில் இமாலய வெற்றி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணி 4வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடைசிப் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்கியது. அதன்படி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தொடக்க வீரர்களான டிக்வெல்ல 43 ஓட்டங்களும், தரங்கா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் மேத்யூஸ் நிலைத்து நின்று ஆடினார். மெண்டிஸ் 38 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த மேத்யூஸ், இறுதிவரை களத்தில் நின்று 97 பந்துகளில் 97 ஓட்டங்கள் எடுத்தார்.

ஷனகா கடைசி கட்டத்தில் அதிரடியாக 15 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 299 குவித்தது.

REUTERS

தென் ஆப்பிரிக்கா தரப்பில் முல்டர், பிலுக்வயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக, தொடக்க வீரர் ஆம்லாவை 0 ஓட்டத்தில் லக்மல் வெளியேற்றினார்.

அதன் பின்னர், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயவின் மாயாஜால சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவால் மீள முடியவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் அதிகபட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர். தென் ஆப்பிரிக்கா 24.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் சுழலில் மிரட்டிய தனஞ்ஜெய 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமர 2 விக்கெட்டுகளையும், டி சில்வா மற்றும் லக்மல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers