இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்தது இந்த வீரர்கள் தான்! ரோகித் சர்மாவிற்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 107 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதைக் கண்ட இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இதே வீரர்கள் தான் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்தார்கள், கடினமான காலத்தில் நாம் ஆதரவு அளிக்க வேண்டாமா? என்ன இருந்தாலும் இது நம் அணி என்று டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள், நீங்கள் உட்பட இதே வீர்ர்கள்தான் தொடர்ந்து அயல்நாடுகளில் சொதப்பி வருகிறீர்கள். நம்பர் 1 நிலைக்கு வந்ததற்கு நம் உள்நாட்டு பிட்ச்களே காரணம் என கூறியுள்ளனர்.

மேலும் உள்நாட்டில் ஓராண்டு ஆடிவிட்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்தோம். வெளியில் வென்றால்தான் நம்பர் 1 இடத்துக்கு தகுதி. வசதியான இடத்திலிருந்து விலகி வெற்றி பெற்றால்தான் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers