ஜோ ரூட்டின் விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடிய கோஹ்லி- ஷமி! ஒன்றுமே பண்ண முடியாமல் வெளியேறிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்திய பின் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் ஷமி அதை வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 107 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து மூன்றாம் நாளான இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடியது. அந்தணியின் துவக்க வீரர்கள் நிதான தொடக்கம் கொடுத்தாலும், இந்திய வீரர்களின் அசத்தல் பந்து வீச்சில் குக் 21, ஜென்னிங்ஸ் 11, அறிமுக வீரர் ஓலே போப் 28 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோ ரூட் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஷமியின் வேகத்தில் எல்.பி.டபில்யூ ஆனார்.

இதனால் ரூட் ஒன்றுமே செய்ய முடியாமல் பவுலியன் திரும்பினார்.

இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டான ஜோ ரூட்டின் விக்கெட்டை கைபற்றியதை இந்திய அணியின் தலைவர் கோஹ்லியும், முகமது ஷமியும் ஆக்ரோஷத்துடன் கொண்டாடினர்.

இங்கிலாந்து உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 123 ஓட்டங்கள் அதிகபட்சமாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்