62 பந்துகளில் 202 ஓட்டங்கள்: அசத்திய 12 வயது சிறுவன்

Report Print Kabilan in கிரிக்கெட்
204Shares
204Shares
ibctamil.com

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் 12 வயது சிறுவன், 62 பந்துகளில் 202 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் கேப்டவுன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், கீரன் பொவர்ஸ்(12) என்ற சிறுவன் பிரைம்ரோஸ் ஹப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் கீரன் பொவர்ஸ் 62 பந்துகளில் 202 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்