கோஹ்லிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் சொன்ன முக்கியமான அட்வைஸ் என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லியைத் தவிர மற்ற எந்த வீரரும் சிறப்பான துடுப்பாட்டத்தை கொடுக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவனான சச்சின் டெண்டுலகர், கோஹ்லி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.

அதை அப்படியே தொடர வேண்டும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, எந்த மாதிரியான விமர்சனங்கள் எழுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் மீது மட்டுமே தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை எவ்வளவு ஓட்டங்கள் குவித்தாலும் போதாது. நிறைய ஓட்டங்கள் சேர்க்கும் வேட்கையுடன் கோஹ்லி ஆடுகிறார்.

இருப்பினும் அவர் எவ்வளவு ஓட்டங்கள் குவித்தாலும், அது அவருக்கு போதுமானதாக இருக்காது.

மனநிறைவு ஏற்படும் போது, அதன் பிறகு சரிவு தொடங்கி விடும். எனவே ஒரு துடுப்பாட்ட வீரராக ஒருபோதும் திருப்திபட்டு விடக்கூடாது.

பந்து வீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் அப்படி இல்லை. களம் இறங்கி எத்தனை ஓட்டங்கள் வேண்டும் என்றாலும் எடுத்து கொண்டே இருக்க முடியும். எனவே திருப்தி அடைந்து விடாதீர் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...