ரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்த வங்கதேச வீரர்: மீண்டும் சர்ச்சை

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சபீர் ரஹ்மான் ரசிகர் ஒருவரை கெட்ட வார்த்தையால் திட்டி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளார்.

வங்கதேச அணியில் சர்சைக்கு பெயர் போன வீரர் என்றால் சபீர் ரஹ்மானை சொல்லலாம், இவர் அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் விருந்தினரை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்தது முதல், சிறுவனை தாக்கியது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கி அபராதங்கள் மற்றும் தடைகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் இவர் சொதப்பி வருவதால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து சபீர் ரஹ்மானின் ரசிகர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சபீர் ரஹ்மானின் மோசமான பார்ம் குறித்து விமர்சித்துள்ளார்.

அதை அவரின் நண்பர் சபீர் ரஹ்மானுக்கு பகிர, உடனே இதைக் கண்ட சபீர் ரஹ்மான் பேஸ்புக்கில் பதிவிட்ட அந்த நபரை கெட்ட வார்த்தையில் திட்டியதுடன், தாக்குதல் விடுப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்