இதை நாங்கள் செய்யவேண்டியது அவசியம்: தோல்வி விரக்தியில் பேசிய இலங்கை அணித் தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.

இலங்கையில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், இது எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. 34.3 ஓவர்களிலேயே ஆல்-அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

50 ஓவர்களும் விளையாடி இருந்தால் 230 முதல் 240 ஓட்டங்கள் வரை எடுத்திருப்போம். புதிய பந்தில் நாங்கள் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியமாகும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்