கோஹ்லியை சமாளிக்க ஓய்வு பெற்ற வீரரை களமிறக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரரை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் தெரிவு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் அணி ,முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 10 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியவர் அடில் ரஷித். இவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ரஷித் இடம்பெற வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாகப் பந்துவீசியதை அடுத்து அவர் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவதாகவும் தேர்வுக்குழுவின் விவாதத்தில் ரஷித்தும் இடம்பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுவது குறித்து ரஷித் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷித், தேர்வுக்குழுவினர் என்மீது நம்பிக்கை வைத்து, இங்கிலாந்து அணி டெஸ்ட் அணிக்கு என்னைத் தேர்வு செய்தால் என் ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.

கோஹ்லி இவருடைய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதால், மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பவுள்ளார் ரஷித்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers