ஒரே இரட்டை சதத்தால் பல சாதனைகள் படைத்த பாகிஸ்தான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், பாகிஸ்தான் வீரர் ஃபஹார் ஜமான் பல சாதனைகளை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 155 ஓட்டங்களுக்கு சுருண்டதால், 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் ஃபஹார் ஜமான் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், 17 இன்னிங்சில் 980 ஓட்டங்கள் எடுத்துள்ள ஃபஹார் ஜமான் இன்னும் 3 போட்டிகளில் 20 ஓட்டங்கள் எடுத்தால், குறைந்த போட்டிகளில் 1000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ஃபஹார் ஜமான் படைத்த சாதனைகள்
  • ஜமானின் 210* ஓட்டங்கள் தான் பாகிஸ்தான் வீரர்களிலேயே ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். இதற்கு முன்பு அந்த அணியின் முன்னாள் வீரர் சயித் அன்வர் 194 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
  • ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் ஃபஹார் ஜமான்.
  • குறைந்த இன்னிங்ஸ்களில்(17) விளையாடி இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபஹார் ஜமான் பெற்றுள்ளார்.
  • ஒருநாள் போட்டி ஒன்றில் சிக்ஸருடன் சேர்த்து அதிக பவுண்டரிகள் (29) அடித்த வீரர் என்ற சாதனையை ஜமான் படைத்துள்ளார். சயித் அன்வர் 27 பவுண்டரிகள் அடித்திருந்தார்.
  • இருதரப்பு ஒருநாள் தொடரில், தொடக்க வீரர்கள் 4 சதங்கள் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதில் ஜமான் 3 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று எடுத்த 399 ஓட்டங்கள் தான் அதிகபட்சம் ஆகும். இதில் பாதி ஓட்டங்கள் ஜமான் அடித்ததாகும்.
AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers