தலைகீழாக நின்றாலும் இனி இந்திய அணிக்கு இப்படி ஒரு வீரர் கிடைக்கமாட்டார்: நிறுத்துங்க என கங்குலி காட்டம்

Report Print Santhan in கிரிக்கெட்

தலைகீழாக நின்றாலும் டோனி போல் யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் டோனியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்கள் சிலர் வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சிக்காத வயதான டோனி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலி, டோனியை தொடர்ந்து கிண்டலாக விமர்சிப்பதை ரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

இனி இந்திய அணிக்கு அவரைப்போல சிறந்த விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் கிடைப்பாரா என தெரியவில்லை.

அவர் இளம் வயதில் பல சிக்சர்கள் அடித்துள்ளார்.

தற்போதும் அதேபோல இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது அதிகம். அணி நிர்வாக அவருடன் பேசி 6-வது வீரராக களமிறங்க செய்ய வேண்டும். அதில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers