இலங்கையின் 12 ஆண்டுகால சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் - ஃபஹார் ஜமான் 304 ஓட்டங்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த தொடக்க வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

புலவாயோவில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 குவித்துள்ளது.

பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் 113 ஓட்டங்களும், ஃபஹார் ஜமான் 210 ஓட்டங்களும் குவித்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப் 304 ஓட்டங்கள் ஆகும்.

இதன்மூலம், கடந்த 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கையின் தொடக்க வீரர்களான ஜெயசூர்யா (152) - உபுல் தரங்கா (109) ஆகியோர் குவித்த 286 ஓட்டங்கள் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

PCB

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்