இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் சண்டிமாலுக்கு தடை: சர்வதேச கிரிக்கெட் கவுசில் அதிரடி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக, இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால், பயிற்சியாளர் மற்றும் அணி மேலாளருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை அணியின் கேப்டன் தினேஸ் சந்திமல் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பான விரிவான விசாரணை நடந்த வந்த நிலையில், இலங்கை அணியின் கேப்டன் தினேஸ் சந்திமல், அணியின் பயிற்சியாளர் Chandika Hathurusingha மற்றும் அணியின் மேலாளர் Asanka Gurusinha ஆகியோர், 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் துவங்க உள்ள, தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டன் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்