விராட் கோஹ்லியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாது: அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்
561Shares
561Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய தொடரில் விராட் கோஹ்லியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாது என அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை வெல்லும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், இந்திய அணித்தலைவர் கோஹ்லி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி குறித்து கம்மின்ஸ் கூறுகையில், ’என்னுடைய தைரியமான, துணிச்சலான கணிப்பு என்னவென்றால் விராட் கோஹ்லியால் இந்த முறை ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்பது தான். அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய தயாராகி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்