இந்திய அணியுடனான உலகக்கிண்ணப் போட்டியில் பிக்சிங்! அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட உமர் அக்மல் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு இணைந்து உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தின.

இதில் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல், 2015-ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது இரண்டு பந்துகள் மட்டுமே விட்டால் 2 லட்சம் டொலர்கள் கொடுப்பதாக என்னிடம் பேசினர் என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில், நான் அப்போது எனக்கு பாகிஸ்தான் தான் முக்கியம், இதைப் பற்றி இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று அவர்களை எச்சரித்தேன்.

இது ஒன்றும் எனக்கு புதிதல்ல, பலமுறை இது போன்று பலர் வந்து பேசியுள்ளதால், எளிதாக அந்த நபர்களை எதிர் கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.

அகமல் இது குறித்து பேசியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அப்போட்டியில் உமர் அக்மல் 4 பந்துகள் எதிர் கொண்டு டக் அவுட்டாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers