டோனியால் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை: புலம்பிய இந்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனியால் தான் எனக்கு இடம் கிடைக்கவில்லை என்று இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

இந்திய அணியில் தற்போது நீக்க முடியாத வீரரான டோனி உள்ளார். இடையில் சொதப்பினாலும், சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி வீரர்களுக்கு நடைபெறும் யோ-யோ டெஸ்டில் இளைஞர்களையே தலை சுற்ற வைக்கிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான பார்த்தீவ் பட்டேல், இந்திய அணியில் டோனியால் தான் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், டோனி விளையாடத் துவங்கிய காலத்திற்கு முன்பே நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடி பயிற்சி எடுக்க துவங்கிவிட்டோம்.

நாங்கள் மட்டும் மோசமாக விளையாடமல் இருந்திருந்தால், இன்று டோனியால் அணியில் இடம் பிடித்திருக்க முடியாது, முதலிடத்தையும் பிடித்திருக்க முடியாது.

நான், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் எங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடாத காரணத்தால்தான் டோனி அணிக்குள் வந்தார்.

என்னுடைய ஆழ்மனதில் இருக்கும் உண்மை என்னவென்றால் டோனி அளவுக்கு நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை.

டோனியின் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம். நாங்கள் இல்லாமல் டோனியின் வெற்றி இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...