இலங்கையின் மிரட்டலான பந்துவீச்சினால் திணறும் மேற்கிந்திய தீவுகள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பார்படாஸில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில், இலங்கை அணியின் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் அணி திணறி வருகிறது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் டிரா ஆன நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பார்படாஸில் தொடங்கியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரர்களாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

இலங்கை அணியின் தாக்குதல் பந்து வீச்சை சற்றும் எதிர்பார்க்காத மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிராத்வைட் 2 ஓட்டங்களிலும், ஸ்மித் 2 ஓட்டங்களிலும், பவுல் 4 ஓட்டங்களிலும் வெளியேறியனர்.

அடுத்து வந்த ஹோப்(11), ரோஸ்டன்(14) ஆகியோரது விக்கெட்டுகளை ரஜிதா வீழ்த்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 53 ஓட்டங்கள் என்றிருந்தது.

@OfficialSLC
AFP

அதன் பின்னர், அணித்தலைவர் ஹோல்டர் மற்றும் விக்கெட் கீப்பர் டாவ்ரிச் இருவரும் கைகோர்த்தனர். இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அந்த அணி 88 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

AFP

டாவ்ரிச் 60 ஓட்டங்களுடனும், ஹோல்டர் 33 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லக்மல், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லஹிரு குமாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers