சண்டிமாலின் கோரிக்கை நிராகரிப்பு: தடையை உறுதி செய்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமாலின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தி சர்ச்சையில் சிக்கினார்.

இனிப்பு ஒன்றை சாப்பிட்டு அதன் எச்சிலை பந்தின் மீது அவர் தேய்த்ததாக புகார் கூறப்பட்டத்தை, அவரும் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர், போட்டி கட்டணத்தில் இருந்து அவருக்கு 100 சதவிதம் அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையையும் போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் விதித்தார்.

அதனைத் தொடர்ந்து, தன் மீதான தடையை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சண்டிமால் மேல்முறையீடு செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி-யின் விசாரணை அதிகாரி மைக்கேல் பிலாஃப், மேல்முறையீட்டை நிராகரித்து தடையை உறுதி செய்தார்.

இதன்மூலம், பார்படாஸில் நடைபெற இருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சண்டிமால் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...