பந்தை சேதப்படுத்தி மாட்டிக் கொண்ட சண்டிமாலுக்கு என்ன தண்டனை?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டி விளையாட தடையும், சம்பளத்தில் நூறு சதவீதம் சம்பளம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாகவும், அவர் இனிப்பு போன்ற ஏதோ ஒன்றை பந்தின் மீது தேய்த்ததாக கூறப்பட்டது.

ஆனால் சந்திமலோ இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார், அதுமட்டுமின்றி இலங்கை கிரிக்கெட் வாரியமும் மறுப்பு தெரிவித்தது.

எந்த வீரரும் எந்தவிதமான தவற்றிலும் ஈடுபடவில்லை. ஆதாரமில்லாத எந்தக் குற்றச்சாட்டையும் கூறினால், வீரர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என இலங்கை நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பந்தை சேதப்படுத்தியது உறுதியாகியதால், ஐசிசி நிர்வாகம் இலங்கை அணியின் மேலாளர் அசாங்கா குருசிங்கா, பயிற்சியாளர் சந்திகா ஹதுராசிங்கா, தலைவர் சந்திமால் ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.

மூவருக்கும் ஒரு போட்டிகள் தடையும், 100 சதவீதம் சம்பளம் அபராதம் எனவும் அறிவித்துள்ளது. மேலும், 2 முதல் 4 புள்ளிகள் டெஸ்ட் போட்டியிலும், 4 முதல் 8 புள்ளிகள் டி20 ஒருநாள் போட்டிகளிலும் குறைக்கப்படும் எனவும் கூறியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்