யாரோட மகனாக வேணாலும் இருக்கட்டும்..சச்சின் மகன் குறித்து பயிற்சியாளர் பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

சச்சின் மகனாக இருந்தாலும், மற்ற வீரர்கள் யாராக இருந்தாலும் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று இந்திய அணியின் இளம் வயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் இந்திய அணி அணி இலங்கைக்கு செல்ல உள்ளது. இந்த இளம் இந்திய அணியில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கார் மகன் இடம் பெற்றது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இளம் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சனத் குமார், சச்சின் மகன் அர்ஜுனாக இருந்தாலும் சரி, மற்ற வீரர்களும் சரி எனக்கு அனைவரும் ஒன்றுதான். இந்திய அணி வெற்றிக்கு சிறப்பாக விளையாட கவனம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப அணி வீரர்கள் இறக்கப்படுவார்கள் எனவும் இலங்கைக்கு எதிராக இந்தியா சிறப்பான வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers