தனி ஒருவனாக பெங்களூருவில் தீவிர பயிற்சி எடுத்து வரும் டோனி: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
198Shares

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி பெங்களூருவில் தனி ஒரு ஆளாக பயிற்சி எடுத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் டோனி இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் டோனி மட்டும் தனிமையில் துடுப்பாட்ட பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

மற்ற வீரர்கள் அனைவரும் இல்லாத நிலையில், அவருக்கு உதவியாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மட்டும் பந்துவீசி வருகிறார். மேலும் அங்குள்ள த்ரோ டௌன் ஸ்பெஷலிஸ்ட் ரகு உடனிருக்கிறார்.

உலகளவில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் டோனி இந்த கடும் பயிற்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்