34 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசையில் சரிவை சந்தித்த அவுஸ்திரேலியா

Report Print Kabilan in கிரிக்கெட்
239Shares

ஐ.சி.சி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி, 34 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் தத்தளித்து வருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் இருபெரும் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னரும், ஸ்டீவன் ஸ்மித்தும் தடையில் இருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அவுஸ்திரேலிய அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் அவுஸ்திரேலியாவின் புள்ளிகள் 102 ஆக குறைந்தது. இதன் எதிரோலியாக ஐ.சி.சி-யின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், அவுஸ்திரேலியா 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலியா 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து(124) முதலிடத்திலும், இந்தியா(122) 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா(113), நியூசிலாந்து(112), பாகிஸ்தான்(102) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 5 இடங்களில் உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்