இந்திய அணியில் ரெய்னாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! வருத்தத்தில் அம்பத்தி ராயுடு

Report Print Santhan in கிரிக்கெட்
448Shares

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான உடற்தகுதி தேர்வான யோ-யோ தேர்வு சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுத்த அம்பத்தி ராயுடு தேர்ச்சி பெறவில்லை.

இதையடுத்து இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டது.

அதில் யோ-யோ தேர்வில் தோல்வியடைந்த அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் யோ-யோ தேர்வில் வெற்றி பெற்றதன் காரணமாகவும், சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததன் காரணமாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது ரெய்னாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். மூன்று ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த ரெய்னா, தற்போது அம்பத்தி ராயுடு யோ-யோ தேர்வில் சொதப்பியதன் மூலமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்