ரகானேவுக்கு முன்னாடியே டோனி செய்துவிட்டார்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்
325Shares
325Shares
ibctamil.com

பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதில் கத்துக் குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியை, இந்திய அணி 2 நாளில் சுருட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்பு, ரகானே தொடருக்கான கிண்ணத்தை வாங்கியவுடன் ஆப்கான் அணி வீரர்களை அழைத்து அவர்களிடம் கிண்ணத்தை கொடுத்து ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்பு ஆப்கானிஸ்தான் அணி இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அது தொடர்பான வீடியோ நேற்று இணையதளத்தில் வேகமாக பரவின.

இந்நிலையில் இதே போன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களை அழைத்து ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

அந்த தொடருடன் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிதினி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால், அதை ஞாபகப்படுத்தும் விதமாக தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களை ஒன்றாக அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா இலங்கையில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான இறுதி போட்டியின் வெற்றிக்கு பின்பு, இலங்கை கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடந்து கொண்டது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்