தவானை தொடர்ந்து சதமடித்து அசத்திய முரளி விஜய்: அரைசதம் விளாசிய ராகுல்!

Report Print Kabilan in கிரிக்கெட்
296Shares
296Shares
ibctamil.com

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதமடித்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய்யும் சதமடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது. முதல் நாளான இன்று, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 96 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின்னர் லோகேஷ் ராகுல் களமிறங்கினார். இந்நிலையில், மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய்யும் தற்போது சதமடித்தார். 153 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்த முரளி விஜய், வாஃபதார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய லோகேஷ் ராகுலும் அரைசதம் விளாசினார். இந்நிலையில், ராகுல் 64 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி தற்போது வரை 53 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

முன்னதாக முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்