ஆப்கானிஸ்தானை திணறடித்த ஷிகர் தவான்! சதமெடுத்து சாதனை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
270Shares
270Shares
ibctamil.com

இன்று தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளின் முதல் பாதிலேயே சதமடித்து அசத்தியுள்ளார் ஷிகர் தவான்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரஹானே துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களமிறங்கினர், இந்தியா முதல் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், 47 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார்.

119 பந்துகளில் 100 ஓட்டங்களை எட்டிப்பிடித்து வலுவான ஸ்கோரை எடுத்தனர், சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசிய தவான், 87 பந்துகளில் சதத்தை எட்டினார்.

இதன்மூலம் முதல் நாளில் முதல் பாதியிலேயே உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் இணைப்பு- இன்று தொடங்குகிறது வரலாற்று டெஸ்ட்

இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கிறது.

சமீபத்தில் அயர்லாந்து- பாகிஸ்தான் மோதிய போட்டி அனைவருக்கும் நினைவிருக்கும்.

வரலாற்று முதல் டெஸ்டில் பாகிஸ்தானை அயர்லாந்து திணறடிக்க, போராடி வென்றது பாகிஸ்தான்.

இந்நிலையில் இன்றைய தினம் தொடங்கவிருக்கும் போட்டியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரஹானே தலைமை தாங்குகிறார்.

தொடக்கவீரராக முரளிவிஜய் அல்லது ஷிகர் தவான் களமிறங்கலாம், ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்த லோகோஷ் ராகுலும் மற்றொரு தொடக்க வீரராக களமிறக்கப்படலாம்.

கோஹ்லி இடத்தில் கருண்நாயரும், டாப் ஆர்டரில் புஜாரா, ரஹானே, மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் விளையாடலாம்.

வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் இணைந்து அசத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் பலவீனமாக இருந்தாலும், மிகப்பெரிய பலமே பந்துவீச்சுதான்.

ரஷித் கான், முகமது நபி போன்றோர் இந்திய வீரர்களுக்கு தொல்லை தரலாம்.

குறிப்பாக இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கும், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்