யாரும் சீண்டாத ரஷீத்கானை ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி எப்படி எடுத்தது? ரகசியத்தை உடைத்த லாசந்த் ராஜ்புட்

Report Print Santhan in கிரிக்கெட்
293Shares
293Shares
ibctamil.com

ஐபிஎல் தொடரில் தற்போது கிங் மேனாக இருக்கும் ரஷீத்கானை ஆரம்பத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை என்று ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் கண்டுபிடிப்பு 19 வயது ரஷித்கான். தனக்கே உரிய லெக்ஸ்பின், கூக்ளி முறை பந்துவீச்சால் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடர், வங்கதேசத்துக்கு எதிரான டி20 என அனைத்திலும் முத்திரை பதித்தார்.

இவரை எப்படி ஹைதராபாத் அணி கண்டுபிடித்தது என்று பலரும் தற்போது வரை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், ரஷீத்கானின் பந்து வீச்சைக் கண்டு வியந்து போனேன்.

இதனால் இவர் ஐபிஎல் தொடரில்விளையாடினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று முதலில் பஞ்சாப் அணியில் இருக்கும் சேவாக்கிடம் கூறினேன், அவரோ அக்சர் பட்டேல் இருக்கிறார் என்று கூறினார்.

இதையடுத்து கொல்கத்தா அணியில் இருக்கும் காம்பீரிடம் பேசினேன். அவரும் தங்களிடம் சுனில் நரைன், குல்தீப் யாதவ் போன்றோர் இருக்கின்றனர் என்று கூறிவிட்டார்.

அதன் பின்பு தான் ஹைதராபாத் அணியில் இருக்கும் லட்சமணிடம் பேசினேன். அவரிடம் நீங்கள் உடனே அவரை எடுக்க வேண்டாம்.

அவர் விளையாடும் போட்டிகளில் அவரின் பந்துவீச்சைப் பாருங்கள் என்று அழைத்தேன். அதன்பின் ஐ கிண்ணம் மற்றும் டி20 போட்டிகளில் ரஷித்கான் விளையாடுவதை விவிஎஸ் லட்சுமண் வந்துபார்த்தார்.

பந்து வீச்சைப் பார்த்து சிலிர்த்து போன் அவர் அதன் பின் ஹைதராபாத் அணிக்கு எடுத்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்போது ஐபிஎல் போட்டியில் தலைசிறந்த பந்துவீச்சாளராக ரஷித்கான் இருந்து வருகிறார். ஒருநேரத்தில் ஐபிஎல் அணிகளால் ஒதுக்கப்பட்ட ரஷித்கான் இன்று கொண்டாடப்படுகிறார் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்