அவுஸ்திரேலியாவுடன் மோதும் இங்கிலாந்து: முதலிடத்தை தக்க வைக்குமா?

Report Print Kabilan in கிரிக்கெட்
144Shares
144Shares
ibctamil.com

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டனில் நடைபெற உள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன.

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. புதிய அணித்தலைவர் டிம் பெய்னின் தலைமையின் கீழ் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் அணியில் இடம் பெறாதது, அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கன் ஸ்டோனிஸ் ஆகியோரை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, ஸ்காட்லாந்திடம் அடைந்த அதிர்ச்சி தோல்விக்கு பிறகு விளையாடும் போட்டி இது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து, இந்த தொடரை இழந்தால், தனது முதலிடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, முதலிடத்தை தக்க வைக்க இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹால்ஸ் ஆகியோர் தங்களது அதிரடியை காட்ட தயாராக உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 142 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் அவுஸ்திரேலியா 81 போட்டிகளிலும், இங்கிலாந்து 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் ‘டை’ மற்றும் 3 ஆட்டங்களில் முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்