என்னுடைய இடத்தை டோனியிடம் தான் தோற்றுள்ளேன்! கெத்தாக பேசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

Report Print Santhan in கிரிக்கெட்
291Shares
291Shares
ibctamil.com

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் டோனி என்ற தலைவனிடம் தான் என்னுடைய இடத்தை தோற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்தி வீரரான டோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, அந்தணிக்கு கீப்பராக சஹால் விளையாடி வருகிறார்.

இருப்பினும் இவரை விட தினேஷ் கார்த்திக் துடுப்பாட்டம், கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் 8 வருடத்திற்கு பின்னர் தமிழக தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல நான் சரியாக விளையாடத காரணத்தால் தான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தேன். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் அதிக போட்டி நிகழுகிறது. அதனால் அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

அதிலும் டோனி வருகைக்கு பின்னர் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க முடியாத நிலை தான் நீடித்தது. அவர் சாதாரண விக்கெட் கீப்பராக இல்லாமல், மிகச் சிறந்த தலைவனாகவும் விளங்கினார். அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது.

இந்திய அணியில் இடம்பிடிப்பது சிரமமாக இருந்தது. அதற்கு டோனி தான் காரணம் என்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி தான் உள்ளது. நான் ஒன்றும் சாதாரண ஒரு வீரரிடம் என் வாய்ப்பை தொலைக்கவில்லை. தோனி போன்ற வீரரிடம் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்