தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்: வரலாற்று தோல்விக்கு பின் இங்கிலாந்து வீரரின் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்
216Shares
216Shares
ibctamil.com

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணி வீரர் பேர்ஸ்டோவ் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ஸ்காட்லாந்து அணியை பொறுத்தவரை இது வரலாற்று வெற்றியாகும். இதனால் இங்கிலாந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஸ்காட்லாந்திற்கு எதிரான தோல்வி, விளையாட்டு போட்டியின் ஒரு பகுதி தான். நீங்கள் No.1 அணியாக இருக்கும்போது, மக்கள் உங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆனால், நீங்கள் உலகின் No.1 அணியாக இருக்க விரும்புவீர்கள். நாங்கள் No.1 அணியாக இருப்பதற்காக விளையாடுகிறோம். அவ்வாறு இருந்தாலும், இல்லை என்றாலும் ஸ்காட்லாந்து அணி அவர்கள் வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். தற்போதைய வெற்றி கொண்டாட்டம் சாதாரணமாக இருக்காது.

ஏனென்றால், நாங்கள் No.1 இடத்தில் இருக்கின்றோம். முன்னணி வீரர்கள் இல்லாத அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது வித்தியாசமான சவால். முற்றிலும் மாறுபட்ட அவுஸ்திரேலியா அணி. அவர்களுக்கு எதிராக விளையாட இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்