இலங்கை அணி பங்கேற்கும் முக்கிய தொடர்: அணித்தலைவர் பெயர் அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்
335Shares
335Shares
ibctamil.com

இலங்கை ஏ அணியும் வங்கதேச ஏ அணியும் மோதவுள்ள கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெறும் மூன்று போட்டிகளில் வங்கதேசம் ஏ அணியும், இலங்கை ஏ அணியும் கலந்து கொண்ட விளையாடவுள்ளன.

இதன் முதல் இரு போட்டிக்கான இலங்கை ஏ அணித்தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

மே மாதம் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்த கருணரத்னே மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

இலங்கை ஏ அணி விவரம்,

திமுத் கருணரத்னே (தலைவர்), தஷுன் ஷனகா (துணைத்தலைவர்), தஷுகா குணத்திலகா, சதிரா சமரவிக்ரமா, லஹிரு திரிமன்னே, அஷன் பிரியன்ஞன், சரித் அஷலங்கா, ஷம்மு அஷன், மனோஜ் சரத்சந்திரா, பிரபத் ஜெயசூர்யா, லக்‌ஷன் சண்டகன், நிஷன் பெய்ரீஸ், ஷெஹன் மதுஷங்கா, நிஷாலா தரகா, டி. குணரத்னே.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்