டோனி ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடுவதற்கு காரணம் இவர்தான்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் தான் தற்போது டோனி அதிரடியாக விளையாடுவதற்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

இது ஒரு புறம் இருந்தாலும், இந்த ஐபிஎல் தொடரில் டோனியின் ஆட்டம் பழைய ஆட்டம் போன்று உள்ளது. அதாவது 2011 உலகக் கிண்ணப் போட்டியில் டோனி எப்படி ஆடினாரோ, அதே போன்று உள்ளதால், போட்டியை சிறப்பாக முடித்து தருகிறார்.

டோனி இப்படி சிறப்பாக விளையாடுவதற்கு மறைமுக காரணம் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற நிஹாஸ் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

இதுவே டோனியின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புலி விழித்துக் கொண்டது காரணம் என்று கூறியுள்ளார். தினேஷ் கார்த்திக் தற்போது கொல்கத்தா அணிக்கு தலைவராக உள்ளார், அந்தணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்