ஐபிஎல் கனவு அணியில் இடம் பிடித்த டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

Cricinfo ஐ.பி.எல் கனவு அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐ.பி.எல்-லின் 11வது சீசனுக்கான PlayOff சுற்றுகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் இணையதளமான Cricinfo தனது ஐ.பி.எல் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

இந்த கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கொல்கத்தா அணித்தலைவராகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இந்த சீசனில் கலக்கி வரும் தினேஷ் கார்த்திக்கும் இதில் இடம்பிடித்துள்ளார்.

இந்த அணிக்கு தலைவராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித்தலைவரும், துடுப்பாட்ட வீரருமான கேன் வில்லியம்சன் உள்ளார்.

ஐ.பி.எல் கனவு அணி விபரம்

 • டோனி (விக்கெட் கீப்பர், சென்னை)
 • கேன் வில்லியம்சன் (அணித்தலைவர், ஐதராபாத்)
 • லோகேஷ் ராகுல் (பஞ்சாப்)
 • தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா)
 • சுனில் நரைன் (கொல்கத்தா)
 • அம்பத்தி ராயுடு (சென்னை)
 • ரிஷாப் பண்ட் (டெல்லி)
 • ஆண்ட்ரூ டை (பஞ்சாப்)
 • உமேஷ் யாதவ் (பெங்களூர்)
 • பும்ரா (மும்பை)
 • ரஷித்கான் (ஐதராபாத்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்