புனே மைதான பராமரிப்பாளர்களுக்கு டோனி கொடுத்த பரிசு!

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை அணித்தலைவர் டோனி புனே மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, காவிரி பிரச்சனை காரணமாக எழுந்த எதிர்ப்பினால் சென்னை மைதானத்தை விடுத்து, புனே மைதானத்தில் விளையாடியது.

அந்த மைதானத்தில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென புனேக்கு போட்டிகள் மாறியதால், சென்னை அணி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், புனே மைதான பராமரிப்பாளர்கள் கடுமையாக உழைத்து சென்னை அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5-யில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்க டோனி முடிவு செய்தார். அதன்படி, நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன், மைதான பராமரிப்பாளர்களை டோனி சந்தித்தார்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்திற்கான தொகையையும், தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் டோனி வழங்கினார்.

இதுகுறித்து டோனி கூறுகையில், ‘இது மைதான பராமரிப்பாளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பணம் மற்றும் புகைப்படம் வழங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers