மும்பை அணியின் தோல்வி: பிரீத்தி ஜிந்தாவையே தூக்கி சாப்பிட்ட ராஜஸ்தான் வீரர்களின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணியின் தோல்வியைக் கண்டு ராஜஸ்தான் அணி வீரர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளார்.

டெல்லி-மும்பை அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டி தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

ஏனெனில் அந்த அணியின் வெற்றி, தோல்வியை பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் எதிர்பார்த்திருந்தன. மும்பை வெற்றி பெற்றால் இரு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறும், இல்லையென்றால் இரு அணிகளில் ஒரு அணிக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி மும்பை அணி தோற்றவுடன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா மும்பை அணியின் தோல்வியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரீத்தி ஜிந்தா என்ன மும்பை அணியின் தோல்வியை கொண்டாடுவது, நாங்கள் கொண்டாடுகிறோம் பாருங்கள் என்பது போல், மும்பை அணியின் போட்டியை ஹோட்டலில் பார்த்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணி வீரர்கள், அந்த அணி தோல்வியடைந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers