2018 கால்பந்து உலகக் கிண்ணத் திருவிழா: பாடல் வெளியீடு

Report Print Kabilan in கிரிக்கெட்

ரஷ்யாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பாடல், Logo, கால்பந்து என சிறப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து தொடர், இந்த ஆண்டு ரஷ்யாவில் ஜூன் 14 முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

ரஷ்யா குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், இந்த கால்பந்து தொடரை கோலாகலமாக நடத்த முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான கால்பந்து, Logo உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

வித்தியாசமான கால்பந்து

இந்த தொடருக்கான கால்பந்திற்கு 'Telstar 18' என பெயரிடப்பட்டுள்ளது. Adidas நிறுவனம் இந்த கால்பந்தை Sponcer செய்கிறது.

கடந்த 1970ஆம் ஆண்டில் நடந்த உலகக் கிண்ண தொடருக்கு பயன்படுத்தப்பட்ட அதே கால்பந்தை கொஞ்சம் மாற்றி Update செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, பழைய பந்தில் 32 கட்டங்கள் இருக்கும். புதிய பந்தில் 6 கட்டங்கள் மட்டுமே இருக்கும்.

Logo

ஒவ்வொரு உலகக் கிண்ண தொடருக்கும் Logo-வில் சிறிய அளவில் மட்டுமே மாற்றம் செய்யப்படும். இந்த ஆண்டு மிக சிறிய அளவிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லிஸ்பன் என்பவர் வடிவமைத்துள்ள இந்த Logo, சிவப்பு மற்றும் நீலம் கலந்த கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. Logo முழுவதும் ரஷ்யாவின் பாரம்பரிய அடையாளம் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடையாள உயிரினம்

ஒவ்வொரு உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கும் ஒரு விலங்கோ, பறவையோ அதிகாரப்பூர்வ அடையாளமாக வைக்கப்படும். இந்த ஆண்டு ‘Zabivaka' எனும் ஒருவகை நரி இனம் அடையாள உயிரினமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரினத்தில் 20 சதவிதம் பூனையின் குணமும், 27 சதவிதம் புலியின் குணமும், மீதம் நரியின் குணமும் இருக்கும். இந்த நரி, கால்பந்தை உதைப்பது போன்ற படம் தான் இந்த தொடரின் அடையாளமாக பயன்படுத்தப்பட உள்ளது.

பாடல்

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக உருவாக்கப்படும் Anthem பாடல் பெரிய அளவில் Hit ஆகும். இதற்கு முன்பு ரிக்கி மார்ட்டினின் ‘’ஆலே.. ஆலே’’, ஷகிராவின் ‘’வக்கா.. வக்கா’’ பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில், இந்த சீசனுக்கான பாடலை அமெரிக்காவின் ஜேசன் ஜெருலோ பாடியுள்ளார். ’Colors' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், உலகில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் உள்ளது. குறிப்பாக கறுப்பின மக்களின் விடுதலையை பேசும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers