ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு மிகப் பெரிய விருந்து: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்பான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

தற்போது இத்தொடரின் லீக் சுற்று முடிந்துள்ளதால், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் போன்ற அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் பிளே ஆப் சுற்று நாளை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் இறுதிப் போட்டி வரும் 27-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அந்த இறுதிப் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் போட்டியுடன் டீசரும் வெளியாகவிருப்பதால், அன்றைய நாள் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து என்றே கூறலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers