மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற பிரீத்தி ஜிந்தா

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், அதே சமயம் டெல்லி அணி வெற்றி பெற்றால் பஞ்சாப் அல்லது ராஜஸ்தான் அணிகளில் ஒரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதனால் இப்போட்டியை பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் கூர்மையாக கவனித்தன. இவர்கள் நினைத்த படியே மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மும்பை அணியின் தோல்வியால், நேற்றைய மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணி சற்று அதிகமாக ரன் ரேட் வித்தியாசங்களில் வெற்றி பெற்றால், முன்னேறிவிடும் என்பதால் பஞ்சாப் அணி வீரர்கள் சற்று நிம்மதி பெரு மூச்சுவிட்டு விளையாடினர்.

ஆனால் பஞ்சாப் அணியோ சென்னை அணியிடம் பரிதாபமாக தோல்வியடைய, இதனால் அந்தணியும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்ததால், ராஜஸ்தான் அணி எளிமையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் பஞ்சாப்-சென்னை அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மைதானத்தில் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பிரீத்தி ஜிந்தா அருகில் இருக்கும் ஒருவரிடம், இறுதியாக மும்பை அணி தோற்றுவிட்டதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஏனெனில் பஞ்சாப் அணி போட்டியில் வெற்றி பெற்றுவிடும் நாம் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார் போல் தெரிகிறது. ஆனால் அவரின் கனவை பஞ்சாப் அணி வீரர்கள் நேற்று ஏமாற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers