சென்னை அணியின் தோல்விக்கு பிராவோவும் ஒரு காரணம்: கடைசி ஓவரில் கொடுத்த ஓட்டங்கள் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஓவரில் பிராவோ ஓட்டங்களை வாரி வழங்கியதால், அதுவும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இதில் சென்னை அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதால், 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது.

டெல்லி அணியுடனான தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படாததே காரணம் என டோனி கூறியிருந்த நிலையில், பிராவோ கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் கொடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் பிராவோ கடந்த சில போட்டிகளில் சிறப்பாக வீசவில்லை. அதிலும் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 6,1,6,1,6,6 என மொத்தம் 26 ஓட்டங்கள் கொடுத்தார்.

எப்போதும் கடைசி ஓவரை சிறப்பாக வீசும் பிராவோ நேற்றும் சிறப்பாக வீசியிருந்தால், சென்னை அணியின் வெற்றி இலக்கிற்கான ஓட்டங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும், சென்னை அணியும் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பிருந்திருக்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்