கடைசி கட்டத்தில் சொதப்பிய டோனி: டெல்லி அணியிடம் மோசமாக அடி வாங்கிய சென்னை

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விய சந்தித்தது.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. டெல்லி அணிக்கு துவக்க வீரராக ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ப்ரித்வி ஷா 17 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ஓட்டங்களிலும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அதிரடி வீரர் ரிஷப் பாண்ட் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர், பாண்ட் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார்.

அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ஓட்டங்களிலும், அபிஷோக் ஷர்மா 2 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் எண்ணிக்கை அப்படியே குறைய ஆரம்பித்தது.

அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ஓட்டங்கள் அடிக்க இறுதியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

விஜய் சங்கர் 28 பந்தில் 36 ஓட்டங்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக ராயுடு, வாட்சன் களமிறங்கினர்.

கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்சன் இந்த போட்டியில் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வெளியேற, ராயுடு மட்டும் தனி ஒருவனாக டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்தார்.

சிறப்பாக ஆடிய ராயுடு அரைசதம் எடுத்த நிலையில் 50 ஓட்டங்களிலும், அடுத்து வந்த டோனி டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க தடுமாறினார்.

இந்த ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை காட்டி வந்த டோனி, இன்றைய போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

23 பந்துகளை சந்தித்த டோனி 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 18-வது ஓவரில் அவுட்டாக சென்னை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிர்கு 128 ஓட்டங்கள் எடுத்து 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்