தலைவராக கோஹ்லியின் செயல்பாடு எப்படி உள்ளது? கொஞ்சம் கூட தயங்காமல் சொன்ன டோனி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகளுக்கான சுற்று முடிவு பெறவுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற 5 அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கோஹ்லி செயல்பட்டு வருகிறார். இதனால் தலைவராக பொறுப்பேற்ற பின்பு, கோஹ்லியின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரிடம் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த கேள்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக உள்ள டோனியிடமும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் கொஞ்சம் கூட தயங்காமல், ஒரு சிறந்த தலைவர் என்பவர் அணி வீரர்களை புரிந்து கொள்பவர் தான்.

அணி வீரர்களின் பலம், பலவீனம் தெரிந்தால் தான் அவர்களுக்கு அதற்கு ஏற்ப நல்ல அறிவுரையை வழங்க முடியும்.

அப்படி இருந்தால் தான் தலைவராக அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முடியும். அந்த வகையில் கோஹ்லியும் சிறந்தவர் தான் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்