நன்னடத்தை விதியை மீறிய பெங்களூரு அணி வீரர்: ஐபிஎல் நிர்வாகம் கண்டனம்

Report Print Kabilan in கிரிக்கெட்
185Shares

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் விவகாரத்தில் பேட்டியளித்த பெங்களூரு வீரர் டிம் சவுதிக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஐதராபாத் அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பந்தை தூக்கி அடித்தார்.

பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றிருந்த டிம் சவுதி, வேகமாக ஓடி வந்து அந்த பந்தைப் பிடித்தார், பந்து கையில் இருந்து தரையில் பட்டதாக தெரியவில்லை.

அத்துடன் 3ஆம் நடுவரின் Replay-யிலும் பந்து கீழே பட்டது போல் தெளிவாக தெரியவில்லை. ஆனால், நடுவர் Not out என அறிவித்துவிட்டார், இதனால் டிம் சவுதி மற்றும் பெங்களூரு வீரர்கள் அனைவரும் விரக்தியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்த பின்னர் டிம் சவுதி டி.விக்கு அளித்த பேட்டியில், கேட்ச் குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், சவுதி ஐபிஎல்-லின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை அவரும் ஒப்புக்கொண்டார்.

எனினும், இது Level-1 வரைமுறைக்குள் வருவதால் கண்டனத்துடன் சவுதி அபராதம் இல்லாமல் தப்பியுள்ளார்.

ஆனால், சவுதியின் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்