ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்த வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாசில் தம்பி ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 51-வது லீக் போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக ஹைதராபாத் அணியில் களமிறக்கப்பட்ட பாசில் தம்பி 4 ஓவர்கள் வீசி 70 ஓட்டங்களை வாரி இறைத்தார்.

இதன்மூலம், ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மிக மோசமான சாதனையைப் பாசில் தம்பி படைத்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில், சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணி என்ற பெருமையைப் பெற்ற ஹைதராபாத் அணியில் இப்படியொருவரா என பலரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்