13வது முறையாக 200 ஓட்டங்கள்: சாதனை படைத்த கோஹ்லி அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் போட்டிகளில், 13வது முறையாக 200 ஓட்டங்களுக்கும் அதிகமாக குவித்து சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர், களமிறங்கிய ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இப்போட்டியில், பெங்களூரு அணி 200 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது.

அதாவது, 13வது முறையாக 200 ஓட்டங்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஐபிஎல்-யில் அதிகபட்ச Score அடித்த அணி என்ற பெருமையும் பெங்களூரு அணி வசமே உள்ளது.

புனே அணிக்கு எதிராக பெங்களூரு அடித்த 272 ஓட்டங்களே இதுவரை ஐ.பி.எல்-யில் அதிகபட்ச Score ஆகும்.

பெங்களூரு அணிக்கு அடுத்த இடங்களில் சென்னை அணியும் (11 முறை 200 ஓட்டங்கள்), மும்பை அணியும் (9 முறை 200 ஓட்டங்கள்) உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்