மீண்டும் விஸ்வரூபமெடுத்த பெங்களூர் அணி: வெற்றிக்கு பின்னர் கெத்து காட்டிய கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இது போன்ற பரபரப்பான போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன் என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் பெங்களூர் அணி தக்கவைத்து கொண்டுள்ளது.

வெற்றிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் கோஹ்லி, இது போன்ற போட்டிகளை முன்பே நிறைய முறை பார்த்து விட்டேன். கடைசி கட்டத்தில் பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தேன்.

சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள், அடுத்து ராஜஸ்தான் உடன் விளையாடும் போட்டியில் இதே நம்பிக்கையுடன் செல்வோம்.

இது தான் பெங்களூருவில் இந்தாண்டு நாங்கள் விளையாடும் கடைசி போட்டி. ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்