கிரிக்கெட்டில் நாணய சுழற்சி முறை ரத்து? ஐசிசி பரிசீலனை

Report Print Kabilan in கிரிக்கெட்
176Shares
176Shares
ibctamil.com

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாரம்பரியமான நாணயச் சுழற்சி முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரீசிலித்து வருகிறது.

கிரிக்கெட்டில் ஒரு அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சை தீர்மானிக்கும் நாணயச் சுழற்சி கிரிக்கெட் தொடங்கப்பட்ட காலம் முதலே இருந்து வருகிறது.

கடந்த 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா மோதிய போட்டியில் இந்த முறை ஆரம்பமானது. உள்நாட்டு அணித்தலைவர் நாணயத்தை சுழற்ற, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் எதிரணித் தலைவர் பூவா, தலையா என்று கேட்பார்.

டெஸ்ட் போட்டியை நடத்தும் நாடுகள், தங்களுக்கு சாதகமாக Pitch-ஐ தயார் செய்து விளையாடுகின்றன. இதனால் எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படுகின்றது.

ஆரம்பத்தில் இதுகுறித்து கண்டனங்கள் எழாமல் இருந்த நிலையில், சமீபகாலமாக இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, நாணயச் சுழற்சி முறையை நீக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2019ஆம் ஆண்டில் நடக்கும் Test Championship தொடரில் இந்த புதிய நடைமுறையை ஐ.சி.சி செயல்படுத்த இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து விளையாட வந்திருக்கும் அணியின் தலைவரே பந்து வீசுவதா அல்லது துடுப்பாட்டம் செய்வதா என்பதை முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நடைமுறை தொடர்பாக இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஐ.சி.சி கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட், மகிளா ஜெயவர்த்தனே, அனில் கும்ப்ளே, ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், டிம் மே ஆகியோரும், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் டேவிட் வொயிட், நடுவர் ரிச்சர்ட் கேட்டில் போரே மற்றும் போட்டி நடுவர்கள் ரஞ்சன் மடுகளே, ஷான் பொல்லாக், கிளார் கனோர் ஆகியோரும் கொண்ட சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களின் பிரதிநிதிக் குழு இதுகுறித்து பேசி முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

நாணயச் சுழற்சி முறைக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், ஷேன் வார்ன் போன்ற பலரும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்